செய்திகள் :

கால்களைச் சங்கிலியால் கட்டி... நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு விமானத்தில் கொடுமை!

post image

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் கட்டியும் அவர்களை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை(பிப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டுள்ள விதம் கவலையளிக்கச் செய்கிறது.

அமெரிக்க விமானத்தில் நாடுகடத்தப்பட்டு தாயகம் வந்தடைந்த பயணிகளில் ஒருவரான தல்ஜீத் சிங், விமானத்தில் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, தங்கள் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாகவும், கைகளிலும் விலங்கால் பூட்டி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ள 20 வயது இளைஞரான சௌரவ் என்பவரும் மேற்கண்ட இதே கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, முதல்கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் இம்மாதம் 5-ஆம் தேதி அமிர்தசரஸ் வந்திறங்கிய நிலையில், அவர்களும் அமெரிக்க விமானத்தில் இதே பாணியில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின், இவ்விவகாரம் நாடெங்கிலும் பேசுபொருளானது. அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, இது குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து டிரம்ப் நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களும் சிறைக் கைதிகளைப் போலவே நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர் அமெரிக்காவிலிருந்து.

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள விமானம் ஒன்று, இன்று(பிப். 16) இந்தியா வந்திறங்கவுள்ளது. அவர்களும் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு அழைத்து வரப்படுவரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறை விஞ்ஞானிக்கு அரிய சிகிச்சை! 5 சிறுநீரகங்கள்.. ஆனால்!

மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானி தேவேந்திர பல்லேவாருக்கு நடத்தப்பட்ட மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் அவரது உடலில் 5 சிறுநீரகங்கள் உள... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: துபை கேங்ஸ்டரின் உதவியாளர் கைது!

சம்பல் வன்முறை சம்பவம் தொடர்பாக துபை கேங்ஸ்டர் ஷாரிக் சதா என்பவரின் உதவியாளர் முகமது குலாம் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமி... மேலும் பார்க்க