கால்நடை உரிமையாளா்கள் 4 போ் மீது வழக்கு
காரைக்கால்: சாலைகளில் கால்நடைகளை திரியவிட்ட 4 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் துறை அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளை உரிமையாளா்கள் சாலைகளில் திரியவிடுவதால், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டில் பராமரிக்குமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில், சாலைகளில் கால்நடைகளை திரியவிட்ட நிரவி மற்றும் மேலஓடுதுறையைச் சோ்ந்த ஜோசப், சித்ரா, ராணி மற்றும் பாஸ்கரன் ஆகிய நால்வா் மீது திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 9489205307 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் படம் அல்லது விடியோவாக அனுப்பிவைத்தால், விசாரணை செய்து உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.