செய்திகள் :

`கால்பந்து என்றால் அவனுக்கு உயிர்; நிச்சயம் சாதிப்பான்!'- மகன் கனவை நனவாக்கும் மாற்றுத்திறனாளி தந்தை

post image

கடந்த திங்கள் அன்று நடிகர் மம்மூட்டி, விளையாட்டு வீரர் PR ஶ்ரீஜேஷ் உட்பட பலர் பங்குபெற்று பிரமாண்டமாக நடைபெற்ற துவக்க விழாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது, மைதானத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்த ஹாஷிம் என்ற நபர்தான். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் அணிவகுப்பைப் பத்திரிகையாளர்களுக்கு போட்டியாக மிகவும் மும்முரமாகத் தனது போனில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

இதைக் கவனித்து அருகில் சென்று "உங்களுக்குத் தெரிந்த யாராவது போட்டியில் பங்குபெறுகிறார்களா?" என அவரிடம் பேசத் தொடங்கினோம்.

கேள்வி கேட்டு முடிப்பதற்குள் பெருமை பொங்கத் தனது மகன் ஹாரிசை பற்றிப் பேசத் தொடங்கினார் அவர்.

"எனது மகன் முஹம்மத் ஹாரிஸ் இங்கே U-14 கால்பந்து போட்டியில் விளையாடப் போகிறான். அவன் பாலக்காடு மாவட்டம் கொங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். சிறிய கடை நடத்தி தான் என் குழந்தைகளை படிக்க வைக்கிறேன். இப்போது எனது மகன் இவ்வளவு பெரிய போட்டியில் பங்குபெறுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மற்ற எல்லா குழந்தைகளுடன் அவனும் இவ்வளவு பெரிய பிரபலங்களின் முன்னால் அணிவகுப்பில் நடந்து வந்ததைப் பார்த்து எனக்குச் சொல்லமுடியாத அளவு சந்தோஷமாக இருந்தது. அதனால் தான் நான் ஆர்வமாக வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தேன்" என மகனைப் பற்றி கண்ணில் நீர் தங்கப் பெருமையுடன் கூறினார்.

பேசி முடித்துவிட்டு தன் மகனை அறிமுகப்படுத்தி வைப்பதற்காக மாணவர்களின் கூட்டத்துக்கு இடையே தேட சென்று விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஹாரிசை அழைத்து வந்து பெருமையுடன் எங்கள் முன் அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு போட்டோ எடுக்கச் சொல்லி மகனுடன் போஸும் செய்தார்.

"எப்படி கால்பந்தில் ஹாரிசுக்கு ஆர்வம் வந்தது" என்ற கேள்விக்கு, "அவனுக்குக் கால்பந்து என்றால் ரொம்ப பிடிக்கும். டிவியிலும் மொபைலிலும் எப்பொழுதும் அதைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பான். அவனுக்கு ரொனால்டோ என்றால் ரொம்ப பிரியம். ஊரில் மற்ற குழந்தைகளுடன் அவனுக்கு விளையாடப் போக ஆசை. ஆனால் அவர்கள் இவனை எப்படிப் பார்ப்பார்கள் என்ற எண்ணம் இருப்பதால் யூடியூபில் பல வீடியோக்களை பார்த்து தனியாகவே பயிற்சி செய்வான். அவனுக்கு இருக்கும் திறமையைப் பள்ளி ஆசிரியர்கள் தான் கண்டுபிடித்து அவனைக் கால்பந்து விளையாடத் தேர்வு செய்தனர்" என்று கூறினார்.

"நானும் மாற்றுத்திறனாளி தான். என் சிறுவயதில் என்னை ஊரில் பலரும் கேலி செய்வார்கள். பலபல பெயர் வைத்து அழைப்பார்கள். அப்போதெல்லாம் என் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

அந்த காலகட்டத்தில் என்னைப்போல நான் மட்டும்தான் உலகத்திலேயே இருக்கிறேன் என்று எண்ணி மிகவும் வேதனைப்பட்டேன். அன்று இவ்வளவு வாய்ப்புகள் ஒன்றும் இருந்ததில்லை. ஆனால் என் மகன் இன்று அதே இடத்தில் இப்படி மாநில அளவிலான போட்டியில் பங்கெடுத்து விளையாடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என்னைக் கேலி செய்த ஊரில் இப்போது அவனை எல்லோரும் பாராட்டிப் பெருமைப்படுகிறார்கள். கால்பந்து என்றால் அவனுக்கு உயிர். அவன் நிச்சயம் சாதிப்பான்... வாழ்க்கையில் என்னுடைய மகன் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்" என்று பெருமையுடன் கூறினார்.

கேரளாவில் முதல்முறையாக ஒலிம்பிக் மாதிரியில் நடைபெறும் இந்த போட்டிகளின் முக்கிய சிறப்பம்சம் முஹமத் ஹாரிஸ் போன்ற 1562 சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் பங்கெடுப்பதே. சாதாரணமாக இந்த பிரிவிலுள்ள குழந்தைகளுக்குத் தனியாகத்தான் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் இம்முறை Inclusive Education அடிப்படையில் எல்லா மாணவர்களுடன் இவர்களும் பங்குபெறுகின்றனர். Standing Jump, Standing throw, handball, football, badminton, 100 meter, 4×100 meter ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகள் இவர்களுக்காக நடத்தப்படுகின்றன.

இதில் முக்கியமாக இவர்களின் ஓட்டப்பந்தய போட்டிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஓட்டப்பந்தயத்தில் பங்குபெறும் பார்வைக் குறைவுடைய மாணவர்களுடன் ஓடுவதற்கு ஒரு Guide runner கொடுக்கப்பட்டிருப்பார். ஓடும்போது இவர்களுக்குச் சரியாக வழிநடத்திச்செல்வதற்கான பொதுப் பிரிவிலுள்ள மாணவர் இவர்.

இப்படி சக மாணவனின் கைபிடித்து தடகள போட்டிகளில் தடைகளை உடைத்தெறிந்து சிறப்பு மாணவர்கள் மைதானத்தில் சீறிப் பாய்ந்தனர். பார்வையாளர்கள் நிறுத்தாமல் கரகோஷங்களை எழுப்பி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். ஒவ்வொருவருடைய ஓட்டமும் பொதுப்பிரிவு மாணவர்களுக்குச் சவால்விடும் அளவுக்கு இருந்தது.

"சாதாரணமாக தனியாகத்தான் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆனால் இம்முறை அவர்களையும் உட்படுத்தி Inclusive Sports போட்டிகள் நடத்தத் தீர்மானித்தோம். இது அவர்களுக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும் கொடுக்க வழிவகுக்கும். எல்லா மாணவர்களைப்போல அவர்களையும் சமூகத்தில் உயர்த்துவது தான் அரசின் லட்சியம்" எனப் போட்டிகளைப் பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் V சிவன்குட்டி தெரிவித்தார்.

கொச்சியில் நடக்கும் இந்த சிறப்புப் போட்டிகள் பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. "Inclusive education" என்ற சொல்லிற்கே இப்போது தான் சரியான அர்த்தம் கிடைத்திருக்கிறது, எனப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

`இனிமே பயப்பட மாட்டேன்கா..!’ - விபத்தில் கால்களை இழந்த விஜய்; கடை வைத்து கொடுத்த விகடன் வாசகர்கள்

ரயில் விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யையும், 'கால் இல்லைன்னா என்ன; தாலிக்கட்ட கை தானே வேணும்' என்று, விஜய்யை மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவைய... மேலும் பார்க்க

``ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..'' - நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்... மேலும் பார்க்க

VKT Balan: 'பலருக்கும் இன்ஸ்பிரேஷன்' - மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் காலமானார்!

மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவால் காலமானார்.டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி. பாலன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தன்னுடைய... மேலும் பார்க்க

`ஓடத்தொடங்கும்போது அம்மாவை நினைச்சுக்குவேன்' - முதலைமைச்சர் கோப்பையில் தங்கம் வென்ற கௌசிகா

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'முதலமைச்சர் கோப்பை 2024'ல் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்துடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை மற்றும் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் 75,000 ரூபாய்க்... மேலும் பார்க்க

`நேற்றுவரை பணி’ - 33 ஆண்டுகளாக நீர்நிலைகள், ஆலயங்களை சீர்படுத்திய நெல்லை முத்துகிருஷ்ணன் காலமானார்

நெல்லை உழவாரப்பணி குழாம் அமைப்பை ஏற்படுத்தி 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த முன்னாள் விமானப்படை வீரான முத்துகிருஷ்ணன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.நெல்லை உழவாரப்பணி குழாம் மூலம் தொடர்ந்தது... மேலும் பார்க்க