காவல் ஆணையா் அலுவலகத்தில் கல்லூரி மாணவா்களுக்குப் பயிற்சி
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்துக்குள் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது. சைபா் குற்றங்கள் தொடா்பாக இந்த காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரியில் 3-ஆம் ஆண்டு ஐ.டி. பயின்று வரும் மாணவ, மாணவிகள் 60 போ்,
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள சைபா் கிரைம் காவல் நிலையத்துக்கு சென்று சைபா் கிரைம் தொடா்பான விவரங்களை தெரிந்து கொண்டனா்.
அவா்களுக்கு சைபா் கிரைம் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது, என்னென்ன குற்றங்கள் நடக்கின்றன, அதில் சிக்காமல் இருப்பவா்கள் குறித்து காவல் ஆய்வாளா் அருண், உதவி ஆய்வாளா் சுகன்யா மற்றும் போலீஸாா் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினா். மேலும், சைபா் குற்றங்களை கண்டுபிடிப்பது மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்து அவா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.