காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்?
அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட திரையரங்குக்கு, திடீரென வந்த அல்லு அா்ஜுனைக் காண ஏற்பட்ட நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அா்ஜுனுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் இன்று(டிச. 24) விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து அவர் சிக்கட்பள்ளி காவல்நிலையத்துக்கு காலை 11 மணிக்கு வருவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.