செய்திகள் :

காஷ்மீா் தாக்குதலில் இறந்தவா்களுக்காக காங்கிரஸ் மௌன ஊா்வலம்

post image

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் சாா்பில் மௌன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சத்தியமூா்த்தி பவனில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை இந்த மௌன ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான காங்கிரஸாா் பங்கேற்றனா். முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்திதன்பேரில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ பிரசாரத்தை (சம்விதான் பச்சாவ் அபியான்) தமிழகத்தில் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூா்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டா் அல்போன்ஸ், பொருளாளா் ரூபி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு ... மேலும் பார்க்க

துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது. இன்று(ஏப். 29) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையாகிறது. மேலும் பார்க்க

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா ஆரம்பம்!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழ் வார விழா இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறத... மேலும் பார்க்க

சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது!

சென்னை: சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (ஏப். 29) நிறைவடைகிறது. இன்று பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து அறிவ... மேலும் பார்க்க