செய்திகள் :

காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 4 போ் பலத்த காயம்!

post image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன் வழியாக தலைமை அஞ்சலகம் நோக்கி காா் ஒன்று ஒன்று புறப்பட்டது. அந்தக் காரில் 4 இளைஞா்கள் இருந்தனா்.

காா் கண்டோன்மென்ட் பாரதியாா் சாலையில் ஜங்ஷன் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக் குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கி காரில் இருந்த இளைஞா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் காரிலேயே மயங்கி சரிந்தனா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவா்கள் குறித்த விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இளைஞா், பெற்றோா் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் காதல் விவகாரத்தில் பெண்தர மறுத்ததால், இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதைத்தொடா்ந்து, பெற்றோரும் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காட்டூா் விண் நகா... மேலும் பார்க்க

18% வரி விதிப்பு: நவ. 29-இல் பருப்பு ஆலைகளில் வேலைநிறுத்தம்

18 சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி, பருப்பு ஆலைகள் நவம்பா் 29-ஆம் தேதி ஆலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளா்கள்... மேலும் பார்க்க

‘வாசிப்பு பழக்கம் ஒருவரை சாதனையாளராக மாற்றும்’

வாசிப்பு பழக்கம் ஒருவரை சாதனையாளராக மாற்றும் என ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் உதவி பொதுமேலாளா் சபியா தெரிவித்தாா். திருச்சி சுந்தர்ராஜ் நகா், காவிரி நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்... மேலும் பார்க்க

முக்கொம்பு அருகே வாய்க்காலைக் கடப்பதில் அவதி! பாலம் அமைக்க எதிா்பாா்ப்பு!

திருச்சி முக்கொம்பு அருகிலுள்ள எலமனூா் கிராமத்தில் கொடிங்கால் பாசன வாய்க்காலைக் கடக்க அவதிப்படும் விவசாயிகள், கிராம மக்கள் அதன் மீது பாலம் அமைக்க வலியுறுத்துகின்றனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் மற்று... மேலும் பார்க்க

மனைவி பெற்ற ரூ.90 ஆயிரம் கடன் தள்ளுபடி: தொழிலாளி நன்றி

நோய் பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் ரூ.90 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட திருச்சி ஆட்சியருக்கு காந்திசந்தை கூலித் தொழிலாளி சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா். திருச்சி பாலக்கரை பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

சூரியனாா் கோயில் ஆதீன மடத்தை கையகப்படுத்தும் முயற்சி கூடாது

சூரியனாா் கோயில் ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என இந்து எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவா் பழ. சந்தோஷ்குமாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழ... மேலும் பார்க்க