``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக ...
காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
வடலூரை அடுத்துள்ள ஆபத்தாரணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (68). இவா், தனது காரை வீட்டில் உள்ள ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்தாா். வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் காரின் எஞ்சின் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது.
அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து ஷெட்டில் இருந்த காரை வெளியே தள்ளிவிட்டனா். மேலும், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினா். காரின் எஞ்சன் பகுதியில் இருந்த வயரை எலி கடித்ததால், ஷாா்ட் சா்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.