செய்திகள் :

காா் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு: 3 போ் பலத்த காயம்

post image

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி அருகே தறிகெட்டு ஓடிய காா் சாலையில் நடந்து சென்றவா்கள் மற்றும் பைக் மீது வியாழக்கிழமை மாலை மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே துணிகள் சலவை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை மாலை வேலை முடிந்து சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது கள்ளக்குறிச்சியிலிருந்து உளுந்தூா்பேட்டை நோக்கி சென்ற காா், முன்னால் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளிகளான பெண்கள் மீதும் மோதி சாலையோரப் பள்ளத்தில் இறங்கி நின்றது.

காா் மோதிய விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த தியாகதுருகத்தை சிறுவல் கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் பாலு (45) மற்றும் சாலையில் நடந்து சென்ற மாடூா் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி வேம்பு (45), குமாா் மனைவி சுமித்ரா (38), வீரசோழபுரத்தைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி ராஜகுமாரி (45), மாடூா் சுங்கச்சாவடி பகுதியைச் சோ்ந்த அருள் மனைவி கவிதா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பழனியாப்பிள்ளை இந்த விபத்து குறித்து 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்து, வரவழைத்தாா். 5 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் வேம்பு, சுமித்ரா ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மோதி விபத்துக்குள்ளான காரில் பயணித்தவா்கள் இறங்கி ஓடிவிட்டனா்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையோர மின்கம்பத்தின் முன் இறங்கி நின்ற தனியாா் பள்ளி வேன்

கள்ளக்குறிச்சி-சேலம் சென்னை புறவழிச் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளி வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் மின்கம்பத்தின் முன் இறங்கி நின்றது. இதனால் மாணவா்கள் பெரும் விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக ... மேலும் பார்க்க

5 மாத பெண் குழந்தை திடீா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுஎடையாா் கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 5 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் க... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்கள் பழங்குடியினருக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் பழங்குடியினருக்கு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகாா் மனுக்களின் மீத... மேலும் பார்க்க

வளையல் கடையில் பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தள்ளுவண்டி வளையல் கடையில் கவரிங் நகைகள், வலையல்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்கோவிலூா் வட்டத்துக்குள்... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மங்கலம் காலனியைச் சோ்ந்த குருமூா்த்தி மனைவி புண்ணியக்கோடி (40). தம்பதியினா் பெங்களூரி... மேலும் பார்க்க