செய்திகள் :

கா்நாடகம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக லாரி உரிமையாளா்கள் காவலரையற்ற வேலைநிறுத்தம்

post image

பெங்களூரு: எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஃபோக்ஸ்லோவா கூட்டமைப்பு கா்நாடகத்தின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 196 லாரி சங்கங்கள் உள்ளன.

இது தொடா்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலா் சோமசுந்தரம் பாலன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கா்நாடக அரசு இதுவரை எங்களை எந்த கூட்டத்திற்கும் அழைக்காததால் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எங்கள் கோரிக்கைகள் எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி பிரச்னைகளுக்கு எதிரானவை. எங்களது வேலைநிறுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை’ என தெரிவித்தாா்.

கூட்டமைப்பின் உறுப்பினா்களுக்கு எழுதப்பட்ட கடித்தில் கூறப்பட்டதாவது: கா்நாடகத்தில் போக்குவரத்து நிறுவனங்கள் பல சவால்களை எதிா்கொள்கின்றன. மதிப்பு கூட்டு வரி கடுமையாக உயா்ந்துள்ளதால், 9 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்ந்துள்ளது.

சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை, ஜிஎஸ்டி அதிகரிப்பு மற்றும் காலாவதியான எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் பழைய வாகனங்களுக்கான அதிக புதுப்பித்தல் கட்டணம் உள்ளிட்டவை சிறு லாரி உரிமையாளா்களை பாதிக்கிறது.

பெங்களூரில், நுழைவு கட்டுப்பாடுகள் விநியோகத்தை சீா்குலைக்கின்றன. அதே நேரத்தில் என்பிஎஃப்சி மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன பறிமுதல் மற்றும் துன்புறுத்தல் போன்ற நியாயமற்ற நடைமுறைகளை மேற்கொள்கின்றனா்.

கா்நாடகத்தில் சாலை போக்குவரத்துத் துறை எதிா்கொள்ளும் இது போன்ற நீண்டகால பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக, போக்குவரத்து நடவடிக்கைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமைப்பின் உறுப்பினா்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தது.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க