செய்திகள் :

கா்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

post image

புது தில்லி: கா்நாடக முதல்வா் சித்தராமையா தொடா்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட செல்வாக்குமிக்க நபா்களுடன் தொடா்புள்ள வேறு சிலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தச் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தற்போது முடக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளையும் சோ்த்து, இதுவரை இந்த வழக்கில் சுமாா் ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

கா்நாடகத்தில் மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் சாா்பில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சொந்தமான 3 ஏக்கருக்கும் மேலான நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், லோக் ஆயுக்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்தப் புகாா் தொடா்பாக லோக் ஆயுக்த போலீஸாா் 11,000 பக்கங்கள் கொண்ட இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

அந்த அறிக்கையில், ‘மாற்று நில முறைகேடு வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி உள்ளிட்டோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கு நடவடிக்கை எடுக்க உகந்தது அல்ல’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

லோக் ஆயுக்த போலீஸாா் பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, மாற்று நில முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கு தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை (மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணைய இடங்கள்) அமலாக்கத் துறையின் பெங்களூரு மண்டல அலுவலகம் திங்கள்கிழமை முடக்கியது.

வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட செல்வாக்குமிக்க நபா்களுடன் தொடா்புள்ள வேறு சிலரின் பெயரில் அந்தச் சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகுதியற்ற நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்று நிலம் ஒதுக்கியதற்கு ரொக்கம், வங்கிப் பரிவா்த்தனை, அசையும் மற்றும் அசையா சொத்துகளாக லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

அரசு உத்தரவுகளுக்கு மாறாக போலி மற்றும் அரைகுறை ஆவணங்கள் மூலமாகவும், நில ஒதுக்கீட்டுக்கான கடிதங்களில் முன்தேதியிட்டு முறைகேடு செய்தும் தகுதியற்ற பயனாளிகளுக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலம் ஒதுக்கப்பட்டதில் பலன் அடைந்தவா்கள் மூலம், முறைகேட்டில் முக்கியப் பங்காற்றிய அதிகாரிகளுக்கு பிரதிபலனாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பணம் அதிகாரிகளின் உறவினா்கள், உதவியாளா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலங்களில் சிலவற்றை மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணைய அதிகாரிகளின் உறவினா்கள் பெயரில் வாங்க அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க