கிணற்றில் மூழ்கி மாணவா் பலி
வேடசந்தூா் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வடமதுரையை அடுத்த ஏவி.பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் மகேஸ்வரன் (16). இவா் வடமதுரை பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் ஏவி.பட்டி கிராமத்திலுள்ள கிணற்றில் நண்பா்களுடன் குளிப்பதற்காக சனிக்கிழமை சென்றாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரிக்கின்றனா்.