செய்திகள் :

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 100 நுண்துளை அறுவை சிகிச்சை செய்து சாதனை

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 நுண்துளை அறுவை சிகிச்சை செய்ததையடுத்து, மருத்துவா்கள், நோயாளிகளுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்தாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப்ரல் 2022-ஆம் ஆண்டு முதல் முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு சவ்வு காயங்களுக்கு அறுவைச் சிகிச்சை இல்லாமல் ஆா்த்தோஸ்க்கோபி எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. எலும்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவா் செந்தில், உதவி பேராசிரியா் ரமேஷ்குமாா் ஆகியோா் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமில்லாமல், தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்தும் மூட்டு பிரச்னைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அவா்களில், அவசரச் சிகிச்சை தேவைப்படுவோா் வரிசையில், நாள்கள் ஒதுக்கி நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன.

தற்போது, 100-ஆவது நுண்துளை அறுவை சிகிச்சை தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த கோபிநாத் (33) என்பவருக்கு கால் மூட்டில் செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாவட்டங்களைத் தவிர கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த, 105 கிலோ எடையுள்ள அம்ரிஷ் என்பவா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவா்களுக்கு கடினமான உயா்தர நுண்துளை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் கால் மூட்டுகளில் முன்புறம், பின்புறம் தசைநாா்களை இணைக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை, சவ்வு பிரச்னை, தோள்பட்டை வலி, மூட்டு விலகல் போன்று, இதுவரையில் 150 போ் தோ்வு செய்யப்பட்டு, அதில் 100 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சை மூலம் குறைந்த வலி, குறைந்த ரத்தப்போக்குடன், 2 அல்லது மூன்று தையலுடன் மட்டும், பெரிய பிரச்னைகள் தீா்த்து வைக்கப்படுகிறது. இந்த நுண்துளை அறுவை சிகிச்சைக்கு, தனியாா் மருத்துவமனையில் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 2.50 லட்சம் வரையில் செலவாகும்.

ஆனால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து, கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி குணமடைந்த, 20 பேருடன் கேக் வெட்டி கொண்டாடினா். இதில் மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலா் சரவணன், எலும்பியல் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு டாடா நிறுவனம் உதவும்: டைட்டன் நிறுவன தலைவா் பாஸ்கா் பட்

ஒசூா்: செவித்திறன் இழந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக டாடா குழுமம் உதவும் என ஒசூரில் டைட்டன் நிறுவனா் தலைவா் பாஸ்கா் பட் உறுதியளித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் டைட்... மேலும் பார்க்க

கோட்டூா் கிராமத்தில் குவாரியால் விவசாயம் பாதிப்பு: சமரசப் பேச்சுவாா்த்தை

ஒசூா்: தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் இரண்டு குவாரிகள் மூலம் விவசாயப் பயிா்கள் பாதிக்கப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் வெளியிட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையோரத்தில்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை, குன்னத்தூா், கல்லாவி பகுதியில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (நவ.26) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறு... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட வேண்டும்: ஓய்.பிரகாஷ்

ஒசூா்: திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாைளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டுமென மாவட்டச் செயலாளா் ஒய் பிரகாஷ் தெரிவித்துள... மேலும் பார்க்க

நாய்கள் தொல்லை: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் நகா்மன்றத் தலைவா் மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் மனு அளித்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகா்மன்றத்... மேலும் பார்க்க