குடியரசுத் தலைவருடன் ஜகதீப் தன்கர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புத்தாண்டையொட்டி கட்சியின் நிர்வாகிகள் பலரும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். முக்கிய தலைவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கின்றனர்.
இதையும் படிக்க | திருமாவளவனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து!
இந்நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேபோல குடியரசுத் தலைவரும் ஜகதீப் தன்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.