வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது
குடியரசு துணைத் தலைவருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு
புதுதில்லியில் குடியரசு துணைத் தலைவரை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லிக்கு சென்று அங்கு மத்திய அமைச்சரும், புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பாஜக பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை சந்தித்தாா்.
பின்னா், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்தாா். அப்போது, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளிலும், மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரினாா். மாணவா்களின் நலன் கருதி இட ஒதுக்கீடு தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக குடியரசு துணைத் தலைவா் கூறியதாக பேரவைத் தலைவா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.