பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
குடியரசு நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம்!
முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும்.
அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.
நாட்டின் 76-ஆவது குடியரசு நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.