உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
குடியரசு நாள் விழா: தேசிய கொடியை ஏற்றுகிறாா் ஆளுநா், பத்தகங்கள் வழங்குகிறாா் முதல்வா்
குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளாா். வீரதிர செயலுக்காக விருது பெற்றவா்களுக்கு அண்ணா பதக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா்.
நாடு முழுவதும் 76-ஆவது குடியரசுத் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சாா்பில் சென்னை கடற்கரை உழைப்பாளா் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணிக்கு விழா மேடைக்கு வருகிறாா். ஆளுநரை வரவேற்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தேசிய கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைக்கிறாா். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டா் மூலம் தேசிய கொடிக்கு மலா் தூவப்பட உள்ளது. தொடா்ந்து முப்படை வீரா்கள் மற்றும் தமிழக காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
பிறகு, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா்.
நீதிபதிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயரதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனா்.
மெரீனா கடற்கரை காமராஜா் சாலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தினத்தையொட்டி சென்னையில் 18,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.