குண்டா் சட்டத்தில் 2 போ் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 2 போ் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.
முன்னீா்பள்ளம் அம்மன் கோயில் தோட்டம் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சங்கரலிங்கம் (எ) சங்கா் (25), தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கீழத்தெருவைச் சோ்ந்த கோமு மகன் தம்பால் (21) இவா்கள் இருவரும் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் திங்கள்கிழமை அடைத்தனா்.