செய்திகள் :

குன்னியூர் மதுக்கடை! எதிர்த்தும் ஆதரித்தும் போராட்டம்! என்ன செய்யப் போகிறது அரசு?

post image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு டாஸ்மாக் கடை வேண்டும், வேண்டாம் என பொதுமக்கள் மாறி மாறி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருவதால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த முடியுமா என்ற திரிசங்கு நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

கோட்டூர் அடுத்துள்ள குன்னியூர் நடுத்தெரு பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் அதிமுக ஆட்சியில் அரசின் சார்பில் மது அருந்தும் வசதியிடன் கூடிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த மதுக்கடைக்கு அருகே 2 கிமீ தூரத்திலிருந்து 4 கிமீ தூரம் வரை உள்ள கம்மங்குடி, வாட்டார், கோட்டூர் ஆகிய இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளது.

குன்னியூரில் எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் டாஸ்மாக் கடை (எண்-9858) திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடையானது மக்கள், மாணவர்கள், வியாபாரிகள் அதிகமாக பயன்படுத்தும் இடத்தில் இருப்பதால் மதுக்குடிக்க வருபவர்களால் ஏற்படுத்தும் பிரச்னையால் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும், எனவே மதுக்கடையை அகற்ற வேண்டும் என கட்சி சார்பற்ற முறையில் ஒரு தரப்பினர் வலியுறுத்தத் தொடங்கினர்.

மற்றொரு தரப்பினர் (கட்சி சார்பற்ற), டாஸ்மாக் கடை அகற்றினால் இந்த பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் மதுக்குடிக்க வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதுடன், மதுக்குடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவம் போது விபத்து ஏற்படுவதாகவும்,மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வரும்போது போலீஸார் நிறுத்தி அபராதம் மற்றும் வழக்குப் பதிவு செய்வதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறி குன்னியூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது என தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைத்தனர்.

இதில், வெளியிலிருந்து பார்க்கும் போது மதுக்கடை எதிர்ப்பு, மதுக்கடை ஆதரவு என்று இருப்பது போல் இருந்தாலும், பின்னணியில் அரசியல் (கட்சி அரசியல் அல்ல) இருப்பதாக பொதுநிலையாளர்கர்கள் கூறுகின்றனர்.

இருதரப்பினரும் அமைதியான முறையில் தங்களது தரப்பு கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு தொடக்கத்தில் டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் என்றும் அகற்றக் கூடாது எனவும் வலியுறுத்தி ஒரே நேரத்திலும் வேறுவேறு தேதிகளிலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.

குன்னியூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு துண்டறிக்கை.

அந்த நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய சமாதானம் செய்து வைத்து வைத்தனர். இதனால்,கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இது குறித்து பிரச்னை ஏற்படாமல் இருந்து வந்தது

இந்நிலையில், மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி ஒருதரப்பினர் போராட்ட அறிவிப்பு செய்தனர். இதனை மற்றொரு தரப்பினர் எதிர்த்து வந்தனர்.

இதனையடுத்து, மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்ற செப்டம்பர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குன்னியூர் டாஸமாக் கடையை இரண்டு மாதத்தில் அகற்றப்படும் என எழுத்துபூர்வமான உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, மூன்று மாதம் கடந்தும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் நடத்துக்கொள்ளும் அதிகாரிகளை கண்டித்து இன்று(நவ.26) செவ்வாய்க்கிழமை ஆதிச்சப்புரம் வளைவு கம்பன்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக மதுக்கடை எதிர்ப்பாளர்கள் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுக்குடித்து பழகிவிட்டோம் மதுக்கடையை அகற்றினால் மதுக்குடிக்க வெளியூர் செல்ல வேண்டி நிலை ஏற்படும், கள்ளக்குறிச்சி போல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று உயிர்பலிகள் நிகழும், விதவைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மேலும், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெறும் இது போன்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றால் குன்னியூரில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது என கோரிக்கை வலியுறுத்தி நவ.27 ஆம் தேதி(நாளை) புதன்கிழமை ஆதிச்சப்புரம் வளைவு கம்பன்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மற்றொரு தரப்பினர் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.

குன்னியூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி புதன்கிழமை நடைபெறுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு துண்டறிக்கை.

ஒரே பகுதியை சேர்ந்தவர்கள், அரசு டாஸ்மாக் கடை வேண்டும் வேண்டாம் எனக் கூறி கட்சி வித்தியாசம் இல்லாமல் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்படுகின்றனர். இதில், இரண்டு துண்டறிக்கையிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,தனி அமைப்புகளை சேர்ந்த பெண்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களது முதல் கையெழுத்து மதுவிலக்கு அரசணையில்தான் என கூறுவதும், பின்னர், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலைதான் எங்கும் தொடர்கிறது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... எதற்காக வழக்குரைஞர்கள் போராட்டம்?

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை வேண்டும், வேண்டாம் என போட்டிப்போட்டு போராட்டம் அறிவித்துள்ள குன்னியூர் ஊராட்சியை சேர்ந்த போராட்ட பிரதிநிதிகளுடன் டாஸ்மாக் நிர்வாகமும் காவல்துறையும் செவ்வாய்க்கிழமை தனிதனி பேச்சுவார்த்தை நடத்தியதில் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி மன்னார்குடியில் வட்டாட்டசியர் முன்னிலையில் இது குறித்து இறுதி முடிவு எடுப்பது என தெரிவித்தை ஏற்றுக்கொண்ட இருதரப்பினரும் இன்றும் நாளையும் நடைபெற இருந்த போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

2000 மக்கள் தொகை அடங்கி சிற்றுராட்சியில் மதுக்கடை வேண்டும்,வேண்டாம் என்ற மாறுபட்ட முடிவில் மக்கள் இருக்கும் நிலையில், மாநிலங்களில் பூரண மதுவிலக்கு என்பது ஆட்சியாளர்களுக்கு திரிசங்கு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை, அரசு தொடக்கத்திலேயே சரியான தீர்வினை காணாவிட்டால் இப்பிரச்னை நகரம், மாநகரம் என பரவி மது ஒழிப்பாளர்களுக்கும் மதுப்பிரியர்களும் நேரடி மோதலை ஏற்படுத்திவிடும் என்பதில் மாற்றுப்பட்ட கருத்து இருக்க முடியாது.

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று(நவ. 26) எழும்பூரில் இருந்து புறப்படும்!

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை திருவிழாவையொட்டி சென்னை சென்ட்ரல் ர்யில் நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

ரூ. 30.27 கோடியில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்!

பதிவுத்துறை சார்பில் ரூ.30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதி... மேலும் பார்க்க

சக்திகாந்த தாஸ் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நெஞ்செரிச்சல் காரணமாக, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை! - மத்திய அரசு பதில்

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தத... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 26) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், கோயம்பேடு, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

அரசியலமைப்பு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்பு!

அரசியலமைப்பு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான நவ. 26 ஆம் தே... மேலும் பார்க்க