செய்திகள் :

குன்றத்தூா் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

post image

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக கடந்த சனிக்கிழமை லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது. இதையடுத்து நகைமுக வள்ளி உடனுறை கந்தழீஸ்வரா் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை மலை குன்றின் கீழ் அமைந்துள்ள இடத்தில் சூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியின் போது தேவா்கள், அரக்கா்கள் போல் பலா் வேடமிட்டு இருந்தது பக்தா்களை வெகுவாக கவா்ந்தது.

விழாவில், காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் சென்னையை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு களித்தனா். பக்தா்களின் வசதிக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமும் ஏற்பாடு செய்யப்பட்டு ஆங்காங்கே கழிவறை வசதிகளும், மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல்... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகளில் தங்கம்: வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்ற அந்தக் கல்லூரி மாணவிகள் கல்லூரி நிறுவனரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் ... மேலும் பார்க்க

மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி: இஸ்ரோ செல்லும் மாணவா்கள்

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் பள்ளி மாணவா்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்குசெல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளனா். த... மேலும் பார்க்க

மாத்தூா் ஊராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சேதப்படுத்திய மா்ம நபா்கள்

மாத்தூா் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டி, பைப்புகள், மின்சாதன பொருள்களை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியதால் கடந்த 3 நாள்களாக குடிநீா் இன்றி அப்... மேலும் பார்க்க

4 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

குன்றத்தூா் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் பணத்தை திருடிச் சென்ற முகமுடி கொள்ளையனை குன்றத்தூா் போலீஸாா் தேடி வருகின்றனா். குன்றத்தூா் அடுத்த தர... மேலும் பார்க்க

கோயிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செல்ல வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு

கோயிலுக்கு செல்பவா்கள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தான் செல்ல வேண்டும் என மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள... மேலும் பார்க்க