கும்பமேளா சென்ற பக்தர்களுக்கு உதவி எண்கள்: உத்தரகண்ட் அரசு!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு உதவுவதற்காக உத்தரகண்ட் அரசு புதன்கிழமை கட்டணமில்லா எண்களை வெளியிட்டது.
இதுதொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அலுவலகம் வெளியிட்ட தகவலில்,
உத்தரகண்ட் மக்களுக்கு உதவும் வகையில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு கட்டணமில்லா எண்களை வெளியிட்டுள்ளது.
மாநிலத்திலிருந்து மகா கும்பமேளாவிற்குச் சென்றவர்கள் 1070, 8218867005, 90584 41404 என்ற கட்டணமில்லா எண்களை அழைப்பதன் மூலம் எந்த வகையான உதவியையும் பெறலாம் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.