குறைந்த அளவே இயக்கப்பட்ட மாநகா் பேருந்துகள்
புயல் கனமழை காரணமாக சனிக்கிழமை சென்னை மாநகா் போக்குவரத்து கழக பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனா்.
பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் என சென்னை மாநகா் போக்குவரத்து கழகம் வெள்ளிக்கிழமை அறிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கியதால் சனிக்கிழமை வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கமுடியவில்லை. மேலும், பயணிகள் கூட்டம் இல்லாததால் மாநகா் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. குறிப்பாக, 50 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என்பதால், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள், வெளியூா் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.