செய்திகள் :

குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

post image

இட்லி கடை இசைவெளியீட்டு விழாவில் குலதெய்வங்கள் குறித்து தனுஷ் பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்குப் பின் இயக்கி நடித்த இட்லி கடை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய தனுஷ், “இட்லி கடை திரைப்படத்தின் கதை என் பால்யத்தில் நடந்தவைதான். வறுமையில் வயலில் வேலைசெய்து இட்லி சாப்பிட்டவர்களுத்தான் அதன் அருமை தெரியும். நான் காசு கிடைக்காமல் இட்லிக்காக ஏங்கியிருக்கிறேன். நம் அப்பா, தாத்தன், பாட்டன், பூட்டன் வாழ்ந்த கதையெல்லாம் காற்றோடு காற்றாக போய்விடக்கூடாது.

பூர்விகம்தான் நம் அடையாளம். நீங்கள் குலதெய்வ வழிபாட்டை விடக்கூடாது. நம் பிள்ளைகளைக் குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று நாமெல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தோம் என்பதை சொல்லிக்கொடுத்து குலதெய்வ அருளுடன் அவர்களை வளர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: குழிதோண்டி புதைக்கற மாதிரி இருக்கு... பாடகர் சத்யன் வேண்டுகோள்!

actor dhanush spokes about idli kadai and ancient gods values

கௌதம் மேனன் - தர்ஷன் நடிப்பில் காட்ஸ்ஜில்லா!

நடிகர்கள் கௌதம் மேனன், தர்ஷன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.பிக்பாஸ் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் தர்ஷன். அப்போட்டியில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து கூகுள் குட்டப்... மேலும் பார்க்க

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!

நடிகர் பாசில் ஜோசஃப் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார். மலையாள திரைத்துறை பல திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு சென்றவர் இயக்குநர், நடிகர் பாசில் ஜோசஃப். இ... மேலும் பார்க்க

குழிதோண்டி புதைக்கற மாதிரி இருக்கு... பாடகர் சத்யன் வேண்டுகோள்!

பாடகர் சத்யன் மகாலிங்கம் விடியோ வாயிலாக வேண்டுகோள் வைத்துள்ளார். இயக்குநர் கதிர் இயக்கிய காதலர் தினத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘ரோஜா.. ரோஜா’ பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.படத... மேலும் பார்க்க

மிகக்குறைந்த வயதில் எம்மி விருதை வென்ற அடோலசென்ஸ் நடிகர்!

நடிகர் ஓவன் கூப்பர் மிகக்குறைந்த வயதிலேயே எம்மி விருதை வென்று அசத்தியுள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் தி அடோலசென்ஸ். குழந்தை வளர்ப்பு மற்றும் இன்றைய ... மேலும் பார்க்க

பைசன் அப்டேட்!

பைசன் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.நாயகனாக துருவ் வ... மேலும் பார்க்க

ஆத்மாவே போ... சூ ஃப்ரம் சோ - திரை விமர்சனம்!

கன்னடத்தில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சூ ஃப்ரம் சோ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மங்களூருவிலுள்ள கிராமம் ஒன்றில் கதைநாயகன் ரவியண்ணா (சனில் கௌதம்) மற்றும் அவர... மேலும் பார்க்க