செய்திகள் :

ஆசிய கோப்பையிலிருந்து விலகும் பாக்.? ஐசிசியிடம் புகார்!

post image

இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்த்துச் சென்ற செயலைக் குறிப்பிட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் ஆலோசனை நடுவர் (மேட்ச் ரெஃப்ரி) ஆக செயல்பட்ட ஆன்டி பைக்ராப்ஃட், டாஸ் சுண்டும்போது இந்திய அணிக்குச் சாதகமாக செயல்படும் விதத்தில், இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதை தவிர்க்கச் செய்தார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, அவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ரெஃப்ரிகள் குழுவிலிருந்து நீக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, ஐசிசியிடம் இன்று(செப். 15) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள புகாரில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தலைவருமான மோசின் நக்வி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘கிரிக்கெட் மாண்பைக் குறிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தை விதிகளையும், அதேபோல எம்சிசி சட்டங்களையும் மேட்ச் ரெஃப்ரி மீறிவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிய கோப்பையிலிருந்து மேட்ச் ரெஃப்ரியை உடனடியாக நீக்க கோரிக்கை முன்வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால், ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான புதன்கிழமை(செப். 17) நடைபெறும் ஆசிய கோப்பை ஆட்டத்திலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆட்டங்களிலும் பாகிஸ்தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் தீர்மானித்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டம் முடிவடைந்ததும், களத்தில் நின்ற இந்திய பேட்ஸ்மென்களான சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேயும் நேராக இந்திய குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓய்வறைக்கு விரைந்தனர். இதனால் அவர்கள் இருவருடனும், அதனைத் தொடர்ந்து பிற இந்திய வீரர்களுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க காத்திருந்த பாகிஸ்தான் அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் கடும் அதிருப்தியில் உள்ள பாகிஸ்தான், ஆட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்புக்கு அந்த அணியின் கேப்டன் சல்மான் அகாவை அனுப்பாமல் உடனடியாக எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்ட இந்திய வீரர்கள்!

Pakistan Cricket Board (PCB) on Monday (September 15, 2025) demanded immediate removal of match referee Andy Pycroft from the Asia Cup, alleging violation of the apex body's code of conduct by him during the game against India in Dubai

பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்டு இந்திய வீரர்கள் சிறப்பான பதிலடி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணியினர் கை குலுக்காததற்கு என்ன காரணம்? என்பதற்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.ஆட்டம் தொடங்குவதற்கு முன... மேலும் பார்க்க

பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா! அபார வெற்றி!

ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: பாக். திணறல்! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு!

ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.துபையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட்: ஆஸி. அணியிடம் இந்தியா போராடி தோல்வி!

பஞ்சாப் மாநிலம் முல்லான்புரில் இன்று(செப். 14) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: பாக். எதிராக இந்தியா முதலில் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) இரவில் மோதுகின்றன.இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், பாகிஸ்தான் டாஸை வென்று முதலில் பேட... மேலும் பார்க்க

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் விளையாட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பலர்... மேலும் பார்க்க