பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!
மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு நேற்று சென்றிருந்தார்.
அதற்கு மறுநாளே குகி இனத் தலைவரான கால்வின் அகெந்தாங்கின் வீடு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.