ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
குலத்தைக் காக்கும் திருச்சி குங்குமவல்லி கோயிலில் திருவிளக்கு பூஜை! கலந்து கொள்ளுங்கள்!
2025 ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி உறையூர் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

முற்காலச் சோழன் சூரவாதித்தனின் மனைவி காந்திமதி கருவுற்று இருந்தாள். திருச்சி தாயுமான சுவாமி மீது அதீத பக்தி கொண்ட காந்திமதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது சுவாமியைத் தரிசிக்கச் சென்றாள். செல்லும் வழியில் பிரசவ வலி கண்டு துடித்தாள். பக்தை மீது கொண்ட ஈசன் காந்திமதியின் அன்னையைப் போன்று உருமாறி வந்து, அவளை களைப்பாற்றி உறங்க வைத்தார். அங்கேயே காந்திமதிக்குப் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காத்தருளினார்.
பின்னர் கண்விழித்த காந்திமதியிடம் `‘உனக்குத் தாயாக நின்று பிரசவம் பார்த்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக இருந்து, உன்னைப் போன்று சூல்கொண்ட பெண்களைக் காத்து நிற்பேன்!'’ என்றும் வாக்கு தந்தார்! இங்ஙனம் ஈசனே பெண்ணாகத் தோன்றி அமர்ந்த இடம்தான் திருச்சி - உறையூர் அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இங்கே அம்பிகையும் குங்குமவல்லியாக எழுந்தருளி மங்கலம் காக்கும் தேவியாக அருள்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் போற்றப்படுகிறாள்.

கருவறையில், தான்தோன்றீஸ்வரர் கிழக்கு நோக்கியவராய் சுமார் ஏழடி உயரம் கொண்ட பிரமாண்ட லிங்கத்திருமேனியராக அருள்கிறார். அம்பிகை, அங்குசம் மற்றும் தாமரை ஏந்தியவாறு அழகுற அருள்கிறாள். இந்தத் தலத்தில் நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன் காட்சி தருவது சிறப்பு. தெற்குப் பிராகாரத்தில் உள்ள தில்லைக் காளிக்கு, 27 வகை மூலிகைகளுடன் மிளகாய் சேர்த்துச் செய்யப்படும் பரிகார ஹோமத்தில் கலந்துகொண்டால் எதிரிகளின் தொல்லை, நோய் பாதிப்புகள் விலகும் என்கிறார்கள்.
இங்கு வந்து ஈசனை வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணம், குழந்தைப்பேறு வேண்டி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது சகஜம் என்கிறார்கள்.
வேண்டியதை வேண்டியவாறே அருளும் இந்த குங்குமவல்லி அன்னையை திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'கவலைகள் தீரும்' 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; குங்குமவல்லியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07