செய்திகள் :

குல்மார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வருத்தமளிக்கிறது: பிரியங்கா

post image

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்தார்.

பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற சுற்றுலாத் தலத்தின் அருகே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போடாபத்ரி என்ற இடத்தில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ராணுவத்தில் சுமை தூக்கும் பணியை மேற்கொண்டிருந்த கிராமத்தினர் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் காயமடைந்தனர். அவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது.

இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை ... மேலும் பார்க்க

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுஷாந்த் சிங் ராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார் வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. ... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

மறைந்த டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.மிகப்பெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் ... மேலும் பார்க்க

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக... மேலும் பார்க்க

உ.பி.யில் தடம்புரண்ட சரக்கு ரயில்!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொ... மேலும் பார்க்க