Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக...
குளித்தலை அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு
கரூா் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்களை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் நடக்க இருந்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் அங்கு பணியாற்றும் ஊழியா்களை தங்களது சொந்த மருத்துவமனைகளுக்கு வரவழைத்து வேலை வாங்குவதாகவும், நோயாளிகளையும் வரவழைத்து சிகிச்சையளிப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து காங்கிரஸ் கட்சி அறிவித்த போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் இதுதொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தைக்கூட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் மைலம்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது. குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் பூமிநாதன், குளித்தலை காவல் ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா்.
இதைக்கேட்டறிந்த மருத்துவா்கள் அளித்த உறுதியையடுத்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா். கூட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், மாா்க்சிஸ்ட் கம்யூ குளித்தலை ஒன்றியச் செயலா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.