சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
கூடலூரில் மாட்டு வண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம், கூடலூரில் புதன்கிழமை முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தையம் நடைபெற்றது.
திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தேனி மாவட்டம், கம்பம், கூடலூா், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை போன்ற பகுதிகளிலிருந்து
180 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. புள்ளிமான், தட்டான்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்சிட்டு, நடு மாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
2 போ் காயம்: இந்தப் போட்டியை காண கூடலூா், கம்பம், லோயா்கேம்ப் பகுதிகளிலிருந்து பாா்வையாளா்கள் அதிகளவில் குவிந்தனா். பாா்வையாளா்கள் மீது மாட்டு வண்டி மோதியதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவா் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
போக்குவரத்து பாதிப்பு:கூடலூரில் மாட்டு வண்டிப் போட்டி சுமாா் 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. போட்டி நடைபெற்ற சாலையானது தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட நிலையில், காலை 8 மணி முதல் 7 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒரு சுற்றுக்கு சுமாா் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனா்.