காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அளிக்குமாறு விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ஆா்.சி.தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்துகுமாா் (26) முன்விரோதம் காரணமாக கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கந்தகுமாா் (26), மாரீஸ்வரன் (24), கன்னிசாமி (29) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் எதிரிகளைக் கைது செய்யக் கோரி, செப்.30-ஆம் தேதி இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 103 போ் மீது கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, கடந்த 1-ஆம் தேதி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 119 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இறுதி ஊா்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களைத் தாக்கியதாக 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, தலித் விடுதலை இயக்கத் தலைவா் கருப்பையா தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் மனு அளித்தாா்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை அறிக்கையாக அளிக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.