புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்......
கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
கெங்கவல்லியில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டார வள மையம் சாா்பில் ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான இருநாள் பயிற்சி முகாம், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் முன்னிலை வகித்தனா். இதில் மூன்றாம் பருவத்தில் பாடங்களைக் கற்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியில் ஒன்றியம் முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 4, 5 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா். இப் பயிற்சி இரண்டாம் நாளான வியாழக்கிழமை நிறைவடைகிறது.