செய்திகள் :

"கேப்டன் இருந்திருந்தால் நான் தேசிய விருது வாங்கியதைக் கொண்டாடியிருப்பார்னு சொன்னாங்க" - MS பாஸ்கர்

post image

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு 'பார்க்கிங்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கைகளால் விருதினைப் பெற்ற எம்.எஸ். பாஸ்கர், சென்னை திரும்பியவுடன் நடிகர் திலகம் சிவாஜி இல்லத்திற்குச் சென்று தேசிய விருதினை சிவாஜி படம் முன் வைத்து வணங்கினார். இதையடுத்து தற்போது கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று வணங்கியிருக்கிறார்.

M.S பாஸ்கர், பிரேமலதா விஜயகாந்த்
M.S பாஸ்கர், பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேசிய எம்.எஸ் பாஸ்கர், "சிவாஜி அப்பா, கலைஞர் கருணாநிதி அப்பா, கேப்டன் விஜயகாந்த் அண்ணன் மூவரும் சேர்ந்துதான் இந்தத் தேசிய விருதை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். தேசிய விருதை வாங்கும்போது அவர்கள் கொடுப்பதாக நினைத்துக் கொண்டுதான் வாங்கினேன்.

கேப்டன் விஜயகாந்த் அண்ணன் இருந்திருந்தால் இதைக் கொண்டாடித் தீர்த்திருப்பார் என்று பிரேமலதா அண்ணியார் சொல்லி என்னை வாழ்த்தினார். மூவரின் ஆன்மாவும் என்னை ஆசிர்வதிக்கும்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

Server Sundaram: ``சுட சுட அப்படியே இருக்கிறது; திரைக்கு வரும், ஆனால்" - ரிலீஸ் குறித்து இயக்குநர்

சந்தானம் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் சர்வர் சுந்தரம்'. திரைப்படம் முடிக்கப்பட்டப் பிறகு சில விஷயங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சர்வர் ச... மேலும் பார்க்க

National Awards: ``எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்'' - 4 வயது சிறுமியைப் பாராட்டிய கமல்ஹாசன்!

71-வது தேசிய விருது விழா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றிருந்தது. மோகன்லால், ஷாருக்கான், விக்ராந்த் மாஸ்ஸி, ராணி முகர்ஜி என உச்ச நடிகர்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் த்ரிஷா தோஷர் என்ற 4 வயது சிறுமி பலர... மேலும் பார்க்க

"பொதுக்குழுவ கூட்டச் சொன்னதுக்கு சஸ்பென்ட் பண்ணிட்டாங்க" - திரைப்படத் தயாரிப்பாளர் சங்க மல்லுக்கட்டு

சங்கங்களில் எல்லாம் இது கலக காலம் போல. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எதிராக நடிகர் நம்பிராஜன் தொடுத்த வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு வரலாமென்கிறார்கள்.மறுபுறம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்... மேலும் பார்க்க

"ஒரே மேடையில் அஜித்தும், விஜய்யும் பேசும் வீடியோ" - சீக்ரெட் சொல்லும் A.M. ரத்னம்

ஏற்கெனவே 'கில்லி' படத்தை ரீ ரிலீஸ் செய்து வசூலை அள்ளி அள்ளிக் குவித்தவர், A.M. ரத்னம். இப்போது குஷி படத்தை வெளியிடும் குஷியில் இருந்த தயாரிப்பாளரிடம் பேசினோம். 'குஷி' படம் உருவான விதம் குறித்துப் பேசி... மேலும் பார்க்க