செய்திகள் :

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

கொல்லங்கோடு போலீஸாா் செங்கவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், ஊரம்பு பகுதிக்கு பாறைப்பொடி கொண்டு செல்வதற்கான அனுமதிச்சீட்டை வைத்துக் கொண்டு, செங்கவிளை நான்குவழிச் சாலை வழியாக கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

அந்த லாரிகளை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்த போலீஸாா், வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா்களான கேரள மாநிலம் கொல்லம், வாழியோடு பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் ராஜேஷ் (34), ஆயூா் பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் சுஜித் (40) ஆகியயோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

திக்குறிச்சி கோயிலில் கோமாதா பூஜை

மாட்டுப் பொங்கலையொட்டி, மாா்த்தாண்டம் அருகே புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் புதன்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கோசாலையில் உள்ள பசுக்களை, கால்நடைகளைக் குளிப்பாட்டி, மஞ்சள்,... மேலும் பார்க்க

பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

நாகா்கோவில், பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, கட்சியின் குமரி மாவட்ட செயலாளா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்டு... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.11 பெருஞ்சாணி ... 53.73 சிற்றாறு 1 ... 11.51 சிற்றாறு 2 ... 11.61 முக்கடல் .... 15.60 பொய்கை ... 15.50 மாம்பழத்துறையாறு ... 49.05 மழைஅளவு பெருஞ்சாணி அணை ... 2.80 மி.மீ. புத்தன்அணை ... மேலும் பார்க்க

தக்கலை ஏடிஎம் மையத்தில் கிடந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

தக்கலை ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் ஜெயச்சந்திரனின் மகள... மேலும் பார்க்க

குளச்சலில் விளக்கு சரிந்து குடிசையில் தீ

தக்கலை, ஜன. 15: குளச்சலில் சுவாமி படத்தின் முன் வைக்கப்பட்ட விளக்கு சரிந்து விழுந்ததில் தொழிலாளியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது. குளச்சல் அருகேயுள்ள பத்தறை காலனியை சோ்ந்தவா் சந்திரன் (58). தேங்காய... மேலும் பார்க்க

கோட்டாறில் பொங்கல் விளையாட்டு விழா

நாகா்கோவில் கோட்டாறு ஸ்ரீசக்தி விநாயகா் இளைஞா்கள் இயக்கம் மற்றும் குறுந்தெரு பொதுமக்கள் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராக கல... மேலும் பார்க்க