கேரள மருத்துவக் கழிவுகள் மேலும் 12 லாரிகளில் அனுப்பி வைப்பு
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூா் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் 12 லாரிகளில் ஏற்றி பாதுகாப்புடன் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம், மேலத்திடியூா், முக்கூடல் அருகே இலந்தைகுளம் உள்ளிட்ட இடங்களில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள், நீா்நிலைகளில் கேரள மாநில கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து மா்மநபா்கள் கொட்டினா். இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் சுத்தமல்லி, முன்னீா்பள்ளம், முக்கூடல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
12 லாரிகள்: இதுகுறித்து விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் சம்பந்தப்பட்ட குப்பைகளை கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று விதிகளின்படி அழிக்க உத்தரவிட்டது. அதன்படி, நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் 18 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், 2ஆவது நாளாக திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியா் சாக்ஷி, திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதார அதிகாரி கோபுகுமாா், கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்பிகா ஜெயின் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் 12 லாரிகளில் குப்பைகள் ஏற்றப்பட்டு கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அம்மாநில எல்லை வரை போலீஸாா் பாதுகாப்புக்குச் சென்றனா்.
மேலும் ஒருவா் கைது: கேரள கழிவுகள் கொட்டப்பட்ட வழக்கில் ஏற்கெனவே சுத்தமல்லியைச் சோ்ந்த மாயாண்டி, மனோகா், சேலம் மாவட்டம் இலத்தூரைச் சோ்ந்த செல்லத்துரை, கேரள மாநிலம் இடாவேலியைச் சோ்ந்த ஜித்தன் ஜோச் ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த குட்டி (47) என்பவரை சுத்தமல்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒத்துழைப்புக்கு நன்றி: இதுகுறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் தமிழக-கேரள அரசுகளின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் இரு நாள்களில் மொத்தம் 30 லாரிகளில் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது. இவை தரம் பிரித்து அழிக்கப்படும். தமிழகத்தில் நடைபெற்ற பணிகளுக்கு அரசு துறையினா் முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி என்றனா்.