Modi-க்கு எதிர்க்கட்சி; Edappadi Palanisamy-க்கு சொந்த கட்சி... சோதனை மேல் சோதனை...
கேள்வி எழுப்பினால் வேறுவேலை இல்லை என சொல்வதா? அன்புமணி
தமிழக அரசு மீது எழும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினால், பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது, மக்கள் பணம் கொள்ளை போகிறது, கேள்வி கேட்டால் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.
இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பியிருக்கும் கேள்வியில், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கிறார்.
இதையும் படிக்க.. இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. எலான் மஸ்க் புகழாரம்! எதைச் சொல்கிறார்?
இராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது’’ என்று கொந்தளித்திருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. அந்த அளவுக்கு ராமதாஸ் ஒன்றும் தவறாக எதையும் கேட்டுவிடவில்லை. ‘‘அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று தான் வலியுறுத்தியிருக்கிறார். அது மிகவும் சரியானதே.
அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் தலைவர் அதானியும், அவரது புதல்வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்தும், அதானியுடனான சந்திப்பு அலுவல்பூர்வமானதா, தனிப்பட்ட முறையிலானதா? என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமை தானே?
ராமதாஸ் செய்த முயற்சியால்தான் தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகள் வென்றெடுக்கப்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளால் தான் 108 அவசர ஊர்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அவர் கொடுத்த அழுத்தத்தால் தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களால் விளைந்த ஒரு நன்மையைக் கூற முடியுமா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.