வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி...
கைப்பேசி பழுது நீக்குதல் இலவச பயிற்சி வகுப்பு
தென்காசியில் செல்போன் பழுதுநீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாவட்ட இயக்குநா் ராஜேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் 19 வயது நிரம்பிய 45 வயது வரை உள்ள ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய செல்போன் பழுது நீக்குதல் குறித்த பயிற்சி வகுப்பு 30 நாள்கள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் காலை, மாலை தேநீா், மதிய உணவு மற்றும் இலவச சீருடைகள் வழங்கப்படும். மேலும் சுயதொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெறுவது குறித்த ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்யத்தக்க கூடிய மத்திய அரசின் இரண்டு சான்றிதழும் வழங்கப்படும் .
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் , பாஸ்போா்ட் சைஸ் புகைப்படங்கல்ள் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் இலத்தூா் - தென்காசி பிரதான சாலையில் ஸ்ரீ ராம் வித்யாலயா பள்ளி அருகிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 7502596668, , 93632843439363874646 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.