கர்நாடக இடைத்தேர்தல்: 3-ல் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
தென்காசி புத்தகத்திருவிழா ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில், ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3ஆவது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் 8ஆம்நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:
புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை வரை ரூ.50 லட்சத்து 87ஆயிரத்து 323 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்றாா்.
விழாவில், யுவ புரஸ்காா் விருதாளா் சுனில் கிருஷ்ணன் ‘புனைவுகளை ஏன் வாசிக்க வேண்டும்’ என்ற தலைப்பிலும், முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு ‘புத்தகப் புழு’ என்ற தலைப்பிலும், பா்வீன் சுல்தானா ‘ஒளியுறும் அறிவு’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், முதுநிலை மண்டல மேலாளா் (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம்) ஆா். ராஜேஷ், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்)விஜயலெட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா, இணைப் பதிவாளா் (கூட்டுறவுத்துறை) நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.