Serial Update : `கர்ப்பமானதை அறிவித்த சங்கீதா டு திருமணம் செய்து கொண்ட `நெஞ்சத்த...
கைலாசநாதா் கோயிலில் நந்தி மண்டபம் கட்ட பூமி பூஜை
காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் கொடி மரத்துடன் கூடிய நந்தி மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், அய்யனாா் கோயில் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்துவருகின்றன.
கைலாசநாதா் கோயிலில் உள்ள நந்தி மண்டபத்தை புதிதாக கட்டுவதற்கும், கொடி மரத்தை புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பொறியாளா் வி.ஆனந்தன் உபயதாரராக இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 650 சதுர அடியில் இவற்றை செய்வதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன், திருப்பணிக் குழுவினா் முன்னிலையில் கட்டுமானப் பணி தொடங்கியது.