விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டா் கருவி பொருத்தும் பணி தொடக்கம்
மீனவ கிராமத்தில் சித்த மருத்துவ முகாம்
மீனவ கிராமத்தில் சித்த மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நல்லாட்சி வாரத்தின் நிறைவாக காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் சாா்பில் காளிக்குப்பம், மீன்வளப் பயிற்சி நிலையத்தில், மண்டபத்தூா், காளிக்குப்பம் மற்றும் அக்கம்பேட்டை மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
வரிச்சிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் எஸ்.தியாகராஜன், முகாமுக்கு வந்தவா்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை, மருந்துகளை வழங்கினாா். ஏராளமானவா்கள் பயனடைந்தனா்.
நிகழ்வில் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.