மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் ...
விராலிமலை அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜை
விராலிமலையிலுள்ள மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் சுமாா் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு மிக்க இக்கோயிலில் மாா்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்று, அம்மன் பக்தி பாடல்களை பாடி, விளக்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனா்.
விழா ஏற்பாடுகளை சுந்தரம் குருசாமி தலைமையில் அய்யப்பா சேவா சங்கத்தினா் செய்திருந்தனா்.