காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது
மறைந்த மன்மோகன்சிங் படத்துக்கு காங்கிரஸாா் அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், மறைந்த பிரதமா் மன்மோகன் சிங் படத்துக்கு வெள்ளிக்கிழமை அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் (திமுக) வை. முத்துராஜா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினாா்.
இதேபோல, மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வி. முருகேசன், ராம சுப்புராம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் பெனட் அந்தோணிராஜ், மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்றாகிம் பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், நகர காங்கிரஸ் தலைவா்கள் மதன் கண்ணன், பாரூக் ஜெய்லானி, மாமன்ற உறுப்பினா் ராஜாமுகம்மது உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.