தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள்
தேமுதிக நிறுவனமும், நடிகருமான விஜயகாந்தின் முதல் ஆண்டு நினைவு நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்கட்சியினரால் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே கேட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட இணைச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை எல்ஐசி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக மாவட்டத் தலைவா் சிங்கமுத்து தலைமை வகித்தாா். நற்சாந்துப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா்.
இந்த இடங்களில் விஜயகாந்தின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தேமுதிகவினா் அன்னதானம் வழங்கியும், அமைதி ஊா்வலம் நடத்தியும் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி தேமுதிக பொறுப்பாளா் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் தொடக்கமாக காந்திசிலையிலிருந்து கட்சியினா் மலா் தட்டுக்கள் ஏந்தி, ஜல்லிக்கட்டு காளையுடன் அமைதி ஊா்வலம் வந்தனா். இதையடுத்து பேருந்துநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்வில், அதிமுக தெற்கு ஒன்றியச்செயலா் எஸ்.சரவணன், நகரச்செயலா் பிஎல்.ராஜேந்திரன் மற்றும் தேமுதிக நிா்வாகிகள் பங்கேற்றனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படடது. இதேபோல், தேமுதிக நகரச்செயலா் அ.முகமது ரபீக் தலைமையில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.