செய்திகள் :

``கேரளா அரசுக்கு வாழ்த்துகள்.." ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்ற கவர்னர் ஆரிப் முஹம்மதுகான்!

post image

கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் இன்று ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை வழியனுப்புவதற்காக கேரள மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் ராஜ்பவனுக்கு சென்றிருந்தனர். முதல்வர் பினராயி விஜயனோ, அமைச்சர்களோ கவர்னரை வழியனுப்ப ராஜ்பவனுக்குச் செல்லவில்லை.

கேரள கவர்னராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்த ஆரிப் முஹம்மதுகான் சி.பி.எம் ஆட்சிக்கு கடும் குடைச்சர் கொடுத்துவந்தார். சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் சாலையில் வைத்து கறுப்பு கொடி காட்டியபோது, காரில் இருந்து இறங்கிச் சென்று 'கிரிமினல்ஸ்' என அழைத்து பரபரப்பை கிளப்பினார். அரசுக்கு எதிராக சாலையோர டீக்கடையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பினராயி விஜயன் மற்றும் ஆரிப் முகமது கான்

தான் எங்கு செல்கிறேன் என உளவுத்துறைமூலம் அறிந்து அந்த தகவலை எஸ்.எஃப்.ஐ அமைப்பினரிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறுவதாகவும். அதனால் அவர்கள் தான் போகும் இடம் எல்லாம் போராட்டம் நடத்துகின்றனர் எனவும் முதல்வர் பினராயி விஜயன் மீது கவர்னர் குற்றம் சாட்டினார். பிரஸ் மீட் நடத்தி அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கவர்னராக ஆரிப் முஹம்மதுகான் செயல்பாடுகள் இருந்தன. இதை மனதில் வைத்தே கேரள முதல்வரோ, அமைச்சர்களோ கவர்னரை வழியனுப்பும் நிகழ்வுக்கு செல்லவில்லை என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

அதே சமயம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பதால் கவர்னரை வழியனுப்ப முதல்வரோ, அமைச்சர்களோ செல்லவில்லை என கூறப்படுகிறது. ராஜ்பவனில் இருந்து புறப்பட்ட கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மலையாளத்தில் பேசினார். கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் கூறுகையில், "கவர்னரின் பதவி காலம் முடிந்துவிட்டாலும், மாநிலத்துடனான பந்தம் தொடரும். அது கேரளா உடனான வாழ்நாள் பந்தமாக இருக்கும்.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரளத்தில் வாழ்ந்த மிகவும் அழகான நினைவுகளுடன் நான் புறப்பட்டுச் செல்லுகிறேன். உங்களையெல்லாம் நான் என்றும் நினைத்துக் கொள்வேன். கேரளாவில் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். கேரளா மிகவும் சிறந்த இடமாக என் இதயத்தில் இருக்கும். கேரளா அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த துக்கத்தில் உள்ளது. எனவே வழியனுப்பு விழா நடைபெறாதது குறித்து நான் எந்த குறையும் கூறவில்லை" என்றார்.

Doctor Vikatan: காதுக்குள் அழுக்கு... சொட்டு மருந்து போட்டால்தான் சுத்தமாகுமா?

Doctor Vikatan: சமீபத்தில், என்னுடைய இடதுகாதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே,காது, மூக்கு, தொண... மேலும் பார்க்க

Health: விருந்துக்குப் போறீங்களா? இத ஃபாலோ பண்ணலாமே...

''விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, ... மேலும் பார்க்க

``தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும்..'' - திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் வைரமுத்து!

`சிலை பேசாது, குறள் பேசும்' - அமைச்சர் தங்கம் தென்னரசுகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர... மேலும் பார்க்க

``கொண்டாடி கொண்டே இருப்போம்" - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!

திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே... மேலும் பார்க்க

Adyar park: பயன்படுத்த முடியாத நிலையில் பெருநகர பூங்கா... நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

சென்னையின் இதயப் பகுதியான அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா. இப்பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங... மேலும் பார்க்க

கடல் நண்டுச்சாறு முதல் அமிர்தப்பொடி வரை...சளி, இருமல் போக்கும் ரெசிபிக்கள்!

கடல் நண்டுச்சாறு நண்டுச்சாறுதேவையானவை:நண்டு - 10, நண்டின் சதைப்பகுதி (தனியாக) - 100 கிராம், பெரிய வெங்காயம் - 250 கிராம், பிரிஞ்சி இலை - 5 கிராம், மிளகு - 10 கிராம், ஏலக்காய் - 5 கிராம், கிராம்பு - 5 ... மேலும் பார்க்க