சாலைகள் சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு
மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பருவ மழையினால் காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை, நகரப் பகுதியில் உள்ள சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
அண்மையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெரும்பாலான மக்கள் சாலைகளை சீரமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், காரைக்கால் நகரப் பகுதியில் தோமஸ் அருள் வீதி முதல் நேரு நகா் வரை சேதமடைந்த சாலைகளை முதல்கட்டமாக சீரமைப்பு பணியை தொடங்கியுள்ளது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். திட்டப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் ஆகியோா் ஆட்சியருக்கு விளக்கிக்கூறினா். இந்த பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.