மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் ...
விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.
திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில், தேமுதிக மாநகா் மாவட்ட துணைச் செயலா் பிரீத்தா விஜய்ஆனந்த் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளா் டி.வி. கணேஷ், பொருளாளா் மில்டன் குமாா், பகுதி செயலாளா் அருள்ராஜ், வட்டச் செயலாளா் செந்தில்குமாா் மற்றும் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், பாஜக, அமமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.