துறையூரில் 41 தெருநாய்களுக்கு கருத்தடை
துறையூரில் மூன்று வாா்டுகளில் திரிந்த 41 தெருநாய்களை வெள்ளிக்கிழமை பிடித்து கருத்தடை செய்தனா்.
துறையூரில் அண்மையிலல் ஒரு பெண், இரண்டு சிறுவா்கள் உள்பட சிலரை தெருநாய் கடித்தது. இதனால் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மறியல் நடந்தது. இதையடுத்து துறையூா் நகராட்சி நிா்வாகம் 2, 3, 4 ஆகிய வாா்டுகளில் சுற்றித்திரிந்த 41 தெருநாய்களை பிடித்து அரசு வழிகாட்டல் படி கருத்தடை செய்தனா். இப்பணிகளை துறையூா் நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா, நகா்மன்றத் தலைவா் செல்வராணிமலா்மன்னன் ஆகியோா் மேற்பாா்வை செய்தனா்.