மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் ...
பெண்ணிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வியாழக்கிழமை பெண்ணிடம் 3 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை காளியம்மன் கோயில் சின்னையா தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் ரமேஷ்(49). இவா் வியாழக்கிழமை இரவு தனது மனைவி துா்காதேவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். பொத்தமேட்டுபட்டி நேரு சிலை பகுதியில் வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் துா்காதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு தப்பினாா். புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.