தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். தற்போது பெய்துவரும் மழையால் அணை நீா்மட்டம் 38 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து, நாள் முழுவதும் மழை பெய்தால் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிவிடும்.
இந்த அணையால் நான்குனேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள 44 குளங்கள் மூலம் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது விவசாயிகள் பிசான நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனா். பெரும்பாலான குளங்களில் போதிய அளவு தண்ணீா் இல்லாத நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அணையிலிருந்து தண்ணீரைத் திறக்க தமிழக அரசுக்கு மாவட்ட பரிந்துரைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.