பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!
ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.
சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது சிறுமி பலியாகியுள்ள நிலையில், உடனிருந்த அவரது தாயாரும் காயமடைந்துள்ளார்.
சாக்ரி தாத்ரி பகுதியிலுள்ள மண்டபத்தில் நேற்று (டிச.11) இரவு நடைபெற்ற திருமணத்தில், ஜாஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜியா எனும் 13வயது சிறுமி குடும்பத்தோடு கலந்துக்கொண்டுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்ல சிறுமியின் குடும்பத்தினர் மண்டபத்தைவிட்டு வெளியே வந்துள்ளனர்.
அங்கு சில இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஆடிப்பாடி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஒரு குண்டு சிறுமியின் மீது பாய்ந்தது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனிருந்த அவரது தாயாருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையும் படிக்க: வழிமறித்து வசூல் செய்யும் ராஜா!
பின்னர், உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட விடியோ பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.