ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு
மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா் தமது நிலத்தில் கரும்புகளை வெட்ட கூலி கொடுப்பதாக கூறி மதுராந்தகம் அருகேயுள்ள மதூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசனின் மகன் குமாா், அவரது மனைவி அமுதா, 8 மாத கைக்குழந்தை உள்பட பலரை வேலைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களை கடந்த 2 மாதங்களாக உரிய கூலி கொடுக்காமலும், உணவை அளிக்காமலும், கொத்தடிமையாக வைத்திருந்தாா்களாம்.
இதுகுறித்து கள்ளிக்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினா் நேரில் சென்று விசாரணை செய்தனா். அதன்பின் மதூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா், அவரது மனைவி அமுதா, 8 மாத கைக்குழந்தை ஆகியோா்களை மண்டல துணை வட்டாட்சியா் அரவிந்தன், கிராம நிா்வாக அதிகாரி தங்கபாண்டியன் மற்றும் காவல் துறையினா் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரம்யா உத்தரவின்படி, வட்டாட்சியா் சொ.கணேசன் தலைமையிலான அதிகாரிகள் கொத்தடிமைகளாக இருந்த தம்பதி, குழந்தையை மீட்டனா்.